கனடாவில் காணாமல் போன அழகிய இளம்பெண் உயிரிழந்த நிலையில் சடலத்தை தேடும் பொலிசார்! சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் உயிரிழந்த இளம்பெண்ணின் சடலம் இன்னும் கிடைக்காத நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் எட்மண்டனை சேர்ந்தவர் பில்லி ஜான்சன் (30). இளம்பெண்ணான இவர் கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் திகதி மாலை காணாமல் போனார்.

அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து பில்லி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சடலம் இன்னும் கிடைக்காத நிலையில் பொலிசார் தொடர்ந்து அது குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பில்லியை கொலை செய்ததாக பதியப்பட்ட வழக்கில் இரு தினங்களுக்கு முன்னர் கென்னித் கோர்டோரலி (35) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பில்லியும், கென்னித்தும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து பொலிசார் சடலத்தை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான விடயங்களை கண்டால் உடனடியாக தங்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்