கனடாவில் 5 பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்த கொண்ட ஆசிரியர்! 20 ஆண்டுகள் கழித்து கைது... வெளியான முழு பின்னணி

Report Print Raju Raju in கனடா
0Shares

கனடாவில் பள்ளி மாணவிகளிடம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக தற்போது ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேல்கரியில் உள்ள உயர்நிலை பள்ளியில் 1986ல் இருந்து 2006 வரை பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் மைக்கேல் ஆண்ட்ரீசன் (57).

இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு தான் மைக்கேல் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளியில் மாணவியாக இருந்த போது அவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என கடந்தாண்டு இறுதியில் பெண் ஒருவர் பொலிஸ் புகார் கொடுத்தார்.

அதே போல 1999 முதல் 2005 வரையில் தங்களிடமும் மைக்கேல் பாலியல் ரீதியான முறையில் மோசமாக நடந்து கொண்டார் என மேலும் 4 பெண்கள் புகார் கொடுத்தனர்.

இதை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மைக்கேலை கைது செய்தனர்.

அவர் மீது சில முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில் வேறு எதாவது தகவல் யாருக்காவது தெரிந்தால் தங்களிடம் கூறலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்