கிண்ணியாவில் செத்துக் கரையொதுங்கும் மீன்கள்! பீதியில் மக்கள்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

கிண்ணியா கடற்கரையோரங்களில் அதிகளவான மீன்கள் இன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்த மீன்கள் கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கடற்கரையோரங்களை வந்தடைந்துள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மீன்கள் உயிரிழந்தமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை என்றும், இதுதொடர்பாக மீனவர்கள் மீன்பிடி திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers