மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம்

Report Print Kumar in சமூகம்

கிழக்கிலங்கையில் மிகவும் பழமைவாய்ந்த அம்மன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு - நாவலடி அருள்மிகு ஸ்ரீ மாரி கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் நவகுண்டபகஸ் மகா கும்பாபிசேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

குறித்த கும்பாபிசேகம் விழா இன்று நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கே தனித்துவமான வழிபாட்டு முறைகளைக்கொண்டதாக கடல்நாச்சியம்மன் வழிபாடுகள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு - நாவலடி ஸ்ரீ மாரி கடல்நாச்சி அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழாவினை முன்னிட்டு அடியவர்கள் அம்பாளுக்கு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது.

கடல் நாச்சி அம்மனுக்கு எண்ணெய் சாத்துவதற்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் சர்வதேச நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு எண்ணெய் சாத்தி வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை விநாயக வழிபாடு, புண்ணியாகவாசனம், விசேட பஞ்சகுண்ட யாகபூஜை, விசேட கும்பபூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு தேவபாராயணம் முழங்க ஆலய மூலமூர்த்தி கோபுரங்கள் உட்பட பரிபால மூர்த்திகளின் ஆலயங்கள் கும்பாபிசேகம் செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்தியாகிய கடல் நச்சியம்மனுக்கு மகா கும்பாபிசேகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கும்பாபிசேக உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டு கடல் நாச்சியம்மனின் வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்