சிறுவர்களுக்கான டேப்லட்டிற்கு அதிரடி விலைக்குறைப்பு செய்யும் அமேஷான்

Report Print Givitharan Givitharan in கணணி

அமேஷான் நிறுவனம் தனது வியாபாரக் குறியீட்டில் டேப்லட்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றமை தெரிந்ததே.

இவற்றின் வரிசையில் சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய Fire Kids எனப்படும் டேப்லட்டினையும் அறிமுகம் செய்திருந்தது.

இதில் Amazon Fire 7 மற்றும் Amazon Fire 8 எனும் இரு வகைகள் காணப்படுகின்றன.

குறித்த டேப்லட்களுக்கான விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது அமேஷான்.

இதன்படி 99.99 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்ட Amazon Fire 7 டேப்லட் 20 பவுண்ட்கள் குறைக்கப்பட்டு 79.99 பவுண்ட்களுக்கும், 129.99 பவுண்ட்களுக்கு விற்பனை செய்யப்பட்ட Amazon Fire 8 டேப்லட் ஆனது 30 பவுண்ட்கள் குறைக்கப்பட்டு 99.99 பவுண்ட்களுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலைக் குறைப்பானது நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றது.

எனினும் இவ் விலைக்குறைப்பானது தற்போது ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்