தற்போது Linux மற்றும் Mac கணினிகளிலும் Mozilla VPN

Report Print Givitharan Givitharan in கணணி
45Shares

மொஸில்லா நிறுவனமானது விசேட அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இதன்படி தற்போது Linux மற்றும் Mac கணினிகளுக்கான Mozilla VPN அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகமானவர்கள் பாதுகாப்பு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக VPN தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

இதற்கான அப்பிளிக்கேஷனை மொஸில்லா நிறுவனமும் ஏற்கணவே அறிமுகம் செய்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள VPN ஊடாக முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள 280 இற்கும் மேற்பட்ட சர்வர்களிலிருந்து சேவையைப் பெற முடியும்.

முன்னர் அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் சர்வர்களிலிருந்தே சேவையைப் பெறக்கூடியதாக இருந்தது.

தவிர ஒரே நேரத்தில் 5 சாதனங்களை இணைக்க முடியும்.

இச் சேவைக்கான மாதாந்தக் கட்டணமாக 4.99 டொலர்கள் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்