கோஹ்லி போல் தோன்றிய ரசிகர்: ஆச்சரியத்தில் உறைந்த விராட்: வியப்பூட்டும் வீடியோ!

Report Print Basu in கிரிக்கெட்

இந்தூரில் நடந்த இந்தியா, நியூசிலாந்து அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோஹ்லியை போல் தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் மைதானத்தில் தோன்றி ஆச்சரியம் அளித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இந்திய டெஸ்ட் அணித்தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோஹ்லி தனது ஆக்ரோசமான ஆட்டத்தினால் மட்டுமின்றி ஸ்டைல் மற்றும் உடற்பயிற்சியின் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்து சூப்பர்ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், இந்தூரில் நடந்த போட்டியின் போது கோஹ்லியை போல் தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் மைதானத்தில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார், பல ரசிகர் அவருடன் புகைப்படம் எடுக்க மல்லுக்கட்டினர்.

உடை மாற்றும் அறையில் இருந்து தன்னை போல் இருப்பவரை கண்ட கோஹ்லி கைதட்டி சிரித்தபடி அதை ரசித்து பார்த்தார்.

தற்போது, குறித்த நிகழ்வு வீடியோவாக இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments