கோஹ்லி மட்டும் தான் இந்திய அணியா? சிரிப்போடு அதிரடியாய் பதிலளித்த டோனி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
360Shares
360Shares
ibctamil.com

இந்திய அணி விராட் கோஹ்லியை மட்டும் நம்பி இருக்கவில்லை என்று அணித்தலைவர் டோனி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து நிர்ணயித்த 261 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 241 ஓட்டங்களுக்கு சுருண்டு தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.

இதனால் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

தோல்விக்கு பிறகு நிருபர்களிடம் டோனி பேசுகையில், இது போன்ற ஆடுகளங்களில் பின்வரிசையில் களமிறங்கி சிறப்பாக ஆடுவது கடினமான விடயம். குறிப்பாக இத்தகைய ஆடுகளங்களில் இலக்கை துரத்தும் போது, சாதிப்பது என்பது கடினமாகத் தான் இருக்கும்.

இந்திய அணி விராட் கோஹ்லியைத் தான் மிக அதிகமாக நம்பி இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். அந்த மாதிரி கிடையாது. இது போன்ற புள்ளி விவரங்கள் துல்லியமான நிலவரங்களை பிரதிபலிப்பதில்லை.

தற்போது பின்வரிசையில் விளையாடும் வீரர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள்.

இதனால் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும், தங்களை நிலை நிறுத்தி கொள்வதற்கும் அவர்களுக்கு மேலும் அவகாசம் அளிக்க வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments