சர்ச்சையான முறையில் வெளியேறி கோஹ்லி: அவுட்டா? நாட் அவுட்டா? புரியாத புதிர்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி சர்ச்சையான முறையில் அவுட் என அறிவிக்கப்பட்டு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாவது நாள் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

ராகுல் வெளியேறி பின் களமிறங்கிய தலைவர் கோஹ்லி நிதானமாக விளையாடி வந்தார். இந்நிலையில், அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஹோல்ஸ்வுட்டின் வீசிய பந்து கோஹ்லியின் காலில் பட்டு சென்றது.

இதை களநடுவர் அவுட் என அறிவிக்க கோஹ்லி உடனே யோசிக்காமல் டிஆர்எஸ் முறையில் மறுஆய்வு கோரினார். மூன்றாவது நடுவர் ஆய்வு செய்ததில் பந்து பேட்டிலும், காலிலும் ஒரே நேரத்தில் பட்டது போன்று தெரிந்தது.

பின்னர், பந்து பேட்டில் படாமல் காலில் தான் பட்டது என கூறி மூன்றாவது நடுவர் அவுட் கொடுக்க சர்ச்சையுடன் கோஹ்லி மைதானத்தை விட்டு வெளியேறினார். இது ரசிசர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments