யானைக்கும் அடி சறுக்கும்: கோஹ்லி பதில்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாவது ஐபிஎல் தொடரை நினைத்தால் சிரிப்புத் தான் வருகிறது பெங்களூரு அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லீக் போட்டிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

கோஹ்லி, கெயில், டிவிலியர்ஸ், வாட்சன் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே உள்ளடக்கிய பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இதனால் பிளே ஆப் சுற்றுக்கான தகுதியை இழந்தது.

இந்நிலையில் இது குறித்து கோஹ்லி கூறுகையில், யானைக்கும் அடி சறுக்கும் என சொல்வார்கள். அது இன்று உண்மையாகிவிட்டது.

சில நேரங்களில் தோல்வியை சகித்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அதை தாண்டி அடுத்த போட்டிகளில் கவனம் செலுத்த முடியும். நடந்ததை பார்த்தால் சிரிப்பதை தவிர, வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments