கேப்டன் கூல் டோனியின் ரகசியத்தை உடைத்த ரெய்னா!

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்
326Shares
326Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் ’கேப்டன் கூல்’ ரகசியத்தை இந்திய கிரிக்கெட் வீரரும் டோனியின் நண்பருமான சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவராக இருந்தபோது மிகவும் அமைதியாகவும் பொருப்பாகவும் செயல்பட்டதன் மூலம் ’கேப்டன் கூல்’ என்று அழைக்கப்ட்டவர் டோனி.

குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் பொருத்தமான முடிவு எடுப்பதில் வல்லவர், இது அணிக்கு பெரும்பாலும் வெற்றியைத் தேடி தந்துள்ளது.

அவர் எந்தவித சூழலிலும் உணர்ச்சி வசப்படமாட்டார் என்றும், மிகச் சிறந்த அணித்தலைவர் என்றும் பல ஆட்டங்களில் அவரின் தலைமையில் விளையடியுள்ள ரெய்னா தெரிவித்துள்ளார்.

மேலும் எந்த சூழலுக்கும் எப்போதும் மூன்று வெவ்வேறு திட்டங்களுடன் தயாராக இருக்கும் டோனி, அடுத்த என்ன என்பதை முன்பே கணிக்க கூடிய திறன் கொண்டவர். ஆட்டத்திற்கு முந்தைய நாள் இரவே அவர் வகுத்து வைத்துவிடும் வியூகங்களை குறித்த சமயங்களில் வெளிப்படுத்துவார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்