இந்தாண்டு ஐபிஎல்-ல் தமிழக ரசிகர்கள் ஆதரவு இந்த மூன்று அணிக்காம்: ஏன்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தமிழக ரசிகர்கள் குறிப்பிட்ட மூன்று அணிக்கு தங்கள் ஆதரவை கொடுப்பார்கள் என நம்பப்படுகிறது.

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பங்கேற்கவில்லை.

தடைக்காலம் முடிந்துள்ளதால் இரண்டு அணிகளும் இந்தாண்டு தொடரில் பங்கேற்கின்றன.

இதனால் கடந்த இரு ஆண்டுகளாக தங்களுக்கென்று சொந்தமான ஐபிஎல் அணி இல்லாத தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இம்முறை ஆதரிக்க மூன்று அணிகள் கிடைத்துள்ளன.

முதலில் சென்னை அணி, இரண்டாவதாக பஞ்சாப், மூன்றாவதாக கொல்கத்தா அணி.

ஏனெனில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் வழிநடத்தும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணியும் தமிழக ரசிகர்களின் சொந்த அணியாக மாறியுள்ளது.

இதற்கேற்றார் போல சமூகவலைதளங்களில் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக்கு கிடைத்துள்ள ஆதரவு இதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்