நட்சத்திர வீரருக்கு காயம்: கவலையில் இலங்கை அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை அணி வீரர் குசால் மெண்டிஸ் காயம் அடைந்துள்ள விடயம் அந்த அணிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தொடர் டி20 போட்டிகளில் இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் சிறப்பாக விளையாடி வருகிறார்.

அவர் தொடர்ந்து அரை சதங்களை விளாசி வருகிறார். இந்நிலையில் 12-ஆம் திகதி இந்தியாவுடனான போட்டியில் இலங்கை தோற்றது.

இப்போட்டியில் 55 ஓட்டங்கள் குவித்த மெண்டிஸ், பவுண்டரி அருகே பீல்டிங் செய்யும் போது கீழே விழுந்து காயமடைந்தார்.

இதனால் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து இலங்கை அணியின் மேலாளர் அசங்கா குருசின்ஹா கூறுகையில், குசால் மெண்டிசுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது.

அடுத்த 24 மணி நேரத்தில் அவர் உடல் நிலை குறித்து சரியான தகவல் தெரியவரும் என கூறியுள்ளார்.

ஏற்கனவே இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் மெண்டிசின் காயம் அணியினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்