அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட், தனது பதவியை திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

ஜேம்ஸ் சதர்லேண்ட், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2001ஆம் ஆண்டு பதவி ஏற்றார். இந்நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘20 ஆண்டு காலமாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். பதவி விலகல் முடிவில் நான் மிகவும் சௌகரியமாக இருக்கிறேன். இது எனக்கு சரியான நேரம்’ என தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோருக்கு சதர்லேண்ட் தான் தடை விதித்தார்.

கடந்த 1998ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தில் இணைந்த ஜேம்ஸ் சதர்லேண்ட், தற்போது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், புதிய தலைவர் பதவி ஏற்கும் வரை தனது பதவியில் நீடிப்பார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்