புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியும் இணைந்துள்ளார்.

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி, சவுதாம்டனில் நேற்று தொடங்கியது.

நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 246 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதிகப்பட்சமாக அந்த அணியின் சாம் கர்ரன் 78 ஓட்டங்கள் எடுத்தார்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டையும் இஷாந்த் சர்மா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தவானும் கே.எல்.ராகுலும் களமிறங்கினர். இருவரும் முறையே, 23, 19 ஓட்டங்களில் பிராட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து புஜாராவும் கோஹ்லியும் ஆட்டத்தை தொடர்ந்தனர். 21.5 ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்தை பவுண்டரிக்கு விளாசினார் விராட் கோஹ்லி.

அந்த ஓட்டங்களுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறாயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்தார். விரைவாக இந்த ஓட்டங்களை எட்டிய 2-வது இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்