4வது டெஸ்டில் வெற்றி பெறுவோம்: இங்கிலாந்து வீரர் பட்லர் நம்பிக்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிராக 233 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருப்பதால், 4வது டெஸ்டில் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் பட்லர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ஓட்டங்களும், இந்தியா 273 ஓட்டங்களும் எடுத்தன.

அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 27 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இதனால், 233 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆல்-ரவுண்டர் குர்ரான் 37 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவர் கூறுகையில், ’இந்த டெஸ்டில் எங்களால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். இந்த ஆடுகளத்தில் 2வது இன்னிங்ஸில் ஓட்டங்கள் சேர்ப்பது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும்.

மொயின் அலி, அடில் ரஷித் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். இதனால் எங்களுக்கு இந்த டெஸ்டில் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers