கேப்டன் பதவியில் இருந்து துக்கியெறியப்படும் கோஹ்லி? இவரை தலைவராக்க முடிவு செய்துள்ளதாக தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் தொடரை இந்திய அணி 1-3 என்று ஏற்கனவே இழுந்துவிட்டதால், கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு தலைவராக இருந்து வந்த கோஹ்லியின் கேப்டன் பதவி பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஹ்லி, தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் ஆகிய இருவரும் பெங்களூரு அணியில் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

2018 ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய பெங்களூரு அணி, பிளே ஆப் சுற்றுக்கே தகுதி பெறவில்லை.

14 லீக் போட்டிகளில் 6-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 6-வது இடத்தை பிடித்து வெளியேறியது.

இதுவரை அந்த அணி ஒருமுறை கூட கோப்பையை வெல்லாததால், அந்த அணி நிர்வாகம், பயிற்சியாளர் குழுவில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்தது.

பெங்களூர் அணி, தலைமை பயிற்சியாளரக இருந்த வெட்டோரியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கேரி கிறிஸ்டனை பெங்களூர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இதே போல் ஆஷிஸ் நெஹ்ராவையும் தலைமை பயிற்சியாளர்கள் குழுவில் இணைந்தது.

இந்நிலையில் கேப்டன் பதவியில் இருந்து கோஹ்லியை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஏ.பி டிவில்லியர்ஸை பெங்களூர் அணியின் கேப்டனாக பெங்களூர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் நடைபெற்று வருவதாகவும், ஆனால் இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers