அவுஸ்திரேலியா, டி-20 கே.எல். ராகுல் தேர்வு: தேர்வு குழுதலைவர் விளக்கம்.

Report Print Abisha in கிரிக்கெட்

மூன்றாவது துவக்க வீரர் தேவை என்பதாலேயே கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுடனான ஒருநாள் மற்றும் டி-20 தொடருக்கான அணியில் கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டார்.

சர்ச்சைகுரிய கருத்து தெரிவித்து சில நாட்கள் போட்டியில் ஒதுக்கி வைக்கப்பட்ட கே.எஸ்.ராகுல் பின் மன்னிப்பு கோரி இந்திய அணியில்சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அவுஸ்திரேலியா டி-20யில் சேர்க்கப்பட்டது எதிர்ப்பு தெரிவித்து பல விமர்சனங்கள் உருவாகின.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக் குழுதலைவர் எம்.எஸ்.கே பிரசாத், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் மூன்றாவதாக ஒரு துவக்க ஆட்டகார வீரர் கட்டாயம் தேவை என்பதாலே ராகுல் சேர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers