ஐபிஎல் கிரிக்கெட்டில் டோனி படைத்த புதிய சாதனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவரும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.டோனி ஐ.பி.எல் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றது.

இந்நிலையில் சென்னை அணித்தலைவர் டோனி விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் குயிண்டான் டி காக், ரோஹித் ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி கேட்ச் செய்து ஆட்டமிழக்க செய்தார்.

இதன்மூலம் 190 போட்டிகளில் 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த டோனி காரணமாக இருந்துள்ளார். இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் தலைவரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் படைத்த சாதனையை (182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள்) டோனி முறியடித்துள்ளார்.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers