சச்சினின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்த கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, இன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைக் காண உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வந்துள்ளனர்.

தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக 140 ஓட்டங்கள் விளாசினார். இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி அரைசதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 11 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் இந்த சாதனையை செய்திருந்த நிலையில், விராட் கோஹ்லி அதனை முறியடித்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு கோஹ்லி 10,943 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் 276 போட்டிகளில் செய்திருந்த இந்த சாதனையை, கோஹ்லி 230 போட்டிகளிலேயே முறியடித்துள்ளார். அத்துடன் 11 ஓட்டங்கள் எடுத்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் 9வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers