12 விக்கெட்டுகள்.. அரைசதம் விளாசல்! இங்கிலாந்தில் மிரட்டும் தமிழக வீரர் அஸ்வின்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின், கவுண்ட்டி கிரிக்கெட்டில் அரைசதம் மற்றும் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்ட்டி கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார்.

நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், சர்ரே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்சிலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அத்துடன் இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார். தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் அஸ்வின், தன்னை அணியில் தெரிவு செய்யாததற்கு பந்துவீச்சு மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

Dinuka Liyanawatte/Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்