ரிஷப் பன்ட்க்கு அறிவுரை வழங்கிய சேவாக் !

Report Print Abisha in கிரிக்கெட்
252Shares

அணியில் தொடர்ந்து இருந்து வருவதால், கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, ரிஷப் பன்ட் தமது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் 15 ஆண்டுகளுக்கும் கோலோச்சிய ஜாம்பவான் தோனியின் இடத்தில் தற்போது இருப்பவர் இளம்வீரர் ரிஷப் பன்ட். அவர், கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளிலும் 4வது வரிசையில் இறங்கிய பன்ட், சொதப்பி தள்ளினார். ஒரு போட்டியில் 20 ஓட்டங்கள் எடுத்த அவர், அடுத்த போட்டியில் டக் அவுட்டானார். டெஸ்டியிலும் இதே நிலைமை தான். மொத்தத்தில் சரியாகவே ஆடவில்லை.இந்நிலையில், ரிஷப் பன்ட் குறித்து முன்னாள் அதிரடி வீரர் சேவாக் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ரிஷப் பன்ட் மிகச் சிறந்த திறமைசாலி. அபார பேட்ஸ்மேன்.

ஆனால் அவர் இன்னும் தம்மை மேம்படுத்த வேண்டியது அவசியம்.இந்திய அணியில் தொடர்ந்து இருந்துவருவதால், அணியுடன் இருக்கும் சூழலையும் அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக, கிடைக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி, தமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சேவாக் அறிவுறுத்தியுள்ளார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்