என்னோட வாழ்க்கையில மோசமான நாட்கள்: கடுப்பான அஸ்வின்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
195Shares

துபாயில் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய அணியின் ஆப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய வாழ்நாளில் மிகவும் மோசமான காலகட்டமாக அதை குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர்கள் அனைவரும் கொரோனா பாதிப்பின்றி தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதற்கும் அவர் மகிழ்ச்சிதெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் ஆப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், அணியில் இணைவதற்காக துபாய் வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னதாக குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டார்.

அந்த காலகட்டம் தன்னுடைய வாழ்நாளின் மிகவும் மோசமான காலகட்டம் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த 5 -6 மாதங்களாக தனது வீட்டில் இருந்த போதும் இத்தகைய வெறுமையை உணரவில்லை என்றும்,

குவாரன்டைனின் முதல் நாள் முழுவதும் வெளியில் பார்ப்பதும் துபாய் லேக்கை பார்ப்பதிலுமே தன்னுடைய நேரத்தை செலவிட்டதாகவும் அவர் கூறினார்.

அடுத்தது புர்ஜ் கலிஃபாவை பார்ப்பதில் நேரம் செலவானது. அழகாக இருந்தாலும் எவ்வளவு நேரம் அதை பார்ப்பது என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்