ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு சிறந்த பினிஷராகவோ, அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என்று அஜின்கியே ரஹானே உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், இன்னும் சில நாட்களில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகம வந்துள்ள வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதன் பின் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி அணி வீரரான அஜின்கியே ரஹானே, நான் தொடக்க வீரராக களமிறங்குகிறேனா என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை . நான் விரைவில் பயிற்சியை தொடங்க இருக்கிறேன்.
அதன் பின்னர் இறுதி தான் இது குறித்து முடிவு எடுக்கப்படும் நான் கிரிக்கெட் விளையாடிய தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை துவக்க ஆட்டக்காரராக விளையாடி வருகிறேன்.
இப்போதும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் டெல்லியில் நான் இங்குஎங்கு ஆடுவேன் என்பது குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை ஒருவேளை ஐந்து அல்லது ஆறாவது வரிசையில் இறங்கினால் கூட டோனி போன்று என்னால் நல்ல ஒரு பினிஷராக விளையாட முடியும் டெல்லி அணி கேட்டுக்கொண்டால் நான் அந்த இடத்திலும் நன்றாக விளையாட காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.