பெர்னாண்டோ அதிரடி! கோல் கிளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி LPL தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது ஜப்னா

Report Print Basu in கிரிக்கெட்
268Shares

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது போட்டியில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

பல தடைகளுக்கு மத்தியில் லங்கா பிரீமியர் லீக் டி-20 தொடரானது நவம்பர் 26ம் தேதி கோலாகலமாக ஆரம்பமானது.

கொழும்பு கிங்ஸ், தம்புள்ள வைக்கிங், கோல் கிளாடியேட்டர்ஸ், ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய ஐந்து அணிகளில் இத்தொடரில் பங்குபெறுகின்றன.

LPL தொடரின் அனைத்து போட்டிகளும் ஹம்பாந்தோட்டை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.

நவம்பர் 26ம் திகதி நடந்த முதல் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ்-கொழும்பு கிங்ஸ் மோதின. இதில் சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி வெற்றிப்பெற்றது.

நவம்பர் 27ம் திகதி நடந்த இரண்டாவது போட்டியில் சாகித் அப்ரிடி தலைமையிலான கோல் கிளேடியேட்டர்ஸ் அணியுடன், திசர பேரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி மோதியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அப்ரிடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 58 ரன்கள் எடுத்தார்.

ஜப்னா அணி தரப்பில் பந்து வீச்சில் ஒலிவியர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோல் கிளேடியேட்டர்ஸ் அணி, 19.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலங்கை எட்டி அபார வெற்றிப்பெற்றது.

கோல் கிளேடியேட்டர்ஸ் தொடக்க ஆட்டகாரர் அவிஸ்க பெர்னாண்டோ இறுதி வரை ஆட்டமிழக்காமல் 92 ஓட்டங்கள் குவித்தார். பெர்னாண்டோவுக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இன்று 2 போட்டிகள் இடம்பெறவுள்ளன. முதலாவது போட்டியில் தம்புள்ள வைக்கிங் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு இடம்பெறும் 2 ஆவது போட்டியில், கொழும்பு கிங்ஸ் மற்றும் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்