உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறிய இந்தியா

Report Print Kavitha in கிரிக்கெட்
221Shares

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 30 புள்ளிகளை வசப்படுத்தி முன்னேறியுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து 420 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 332 புள்ளிகளும் பெற்று உள்ளன.

மேலும் புள்ளிகளுக்குரிய சதவீதத்தின் அடிப்படையில் இந்தியா(71.7 சதவீதத்தில் முன்னிலையிலும் நியூசிலாந்து 70 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 69.2 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்