அந்த தருணம் கண்கலங்கிவிட்டேன்! நான் எதிர்பார்க்கவே இல்லை: தமிழன் நடராஜன் நெகிழ்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares

வெற்றிக் கோப்பையை கையில் வாங்கும் போது நான் கண்கலங்கிவிட்டேன் என்று இந்திய அணியில் இடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த நடரஜான் உருக்கமுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் சேலம், சின்னப்பட்டியை சேர்ந்த நடராஜன் என்ற கிரிக்கெட் வீரர், கடந்த ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம, அவுஸ்திரேலியா சென்ற இந்திய அணிக்கு வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக சென்றார்.

அதன் பின் இந்திய அணியில் வீரர்கள் காயம் காரணமாக, பந்து வீச்சாளர்கள் விலக, நடராஜனுக்கு ஒருநாள் தொடரில் கடைசி போட்டியிலும், டி20 தொடரிலும், டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடராஜன்.

தொடர் முடிந்து இந்தியா திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், ஐ.பி.எல்., போட்டிகளில் விளையாடியது, சர்வதேச போட்டிகளில் விளையாட உதவியாக இருந்தது.

அவுஸ்திரேலியா தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நினைத்தேன்.

ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது.

சக வீரர், பயிற்சியாளர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர். அறிமுக வீரர் என கருதாமல் அணியினர் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினர்.பிற்நத குழந்தையை பார்ப்பதை விட நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன்.

அவுஸ்திரேலியாவில் வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் கண்கலங்கிவிட்டேன். நான் மட்டுமின்றி, அணியில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து விளையாடியதால் தான் வெற்றி கைவசமானது.

ஒற்றை சிந்தனையுடன் கடினமாகவும் உண்மையாகவும் உழைத்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சியாக உள்ளேன்.

கடின உழைப்பு நிச்சயம் பலன் கொடுக்கும் என்பது தான் அனைவருக்கும் நான் கூற வரும்புவது. இந்தியாவுக்காக மேலும் பல போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது இலக்கு என்று கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்