Hantavirus: இது உலகின் அடுத்த அச்சுறுத்தலா? பலரின் கேள்விக்கான பதில்

Report Print Abisha in நோய்

சீனாவில் உருவாகியுள்ள புதிய வைரஸான ஹண்டா(Hanta) அடுத்த உலக அச்சுறுத்தலா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உலகில் தற்போது வேகமாக பரவி வரும் நோயாக கொரோனா தொற்று உள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல நாடுகளில் மக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் நபர் ஒருவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சற்று நேரத்தில் உயிரிழந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹண்டா வைரஸ் தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து அவர் பயணித்த பேருந்தில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், அதில் ஒருவருக்கும் அந்த வைரஸ் தொற்று இல்லை. ஆனால் அவர்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கொரோனாவின் தாக்கத்தால் உலகமே கதிகலங்கிபோய் உள்ள நிலையில், ஹண்டாவின் தாக்கம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கான பதில்

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி எலிகளின் உடலை தாக்கும் ஹண்டா வைரஸ், அவற்றின் மூலம், அதாவது எலிகளின் கழிவு அல்லது எச்சில் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. ஆனால், இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிய ஒருவாரம் முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம். மேலும், ஹண்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி,வாந்தி ஆகியவை ஏற்படும். சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனைகள் ஏற்படும். பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டு மரணம் கூட நிகழலாம்.

ஹண்ட வைரஸ் புதிதாக உருவான வைரஸ் கிடையாது. உலகின் பல்வேறு பகுதிகளில் இதன் தொற்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்தாண்டு ஜனவரி மாதம், தென் அமெரிக்காவில் உள்ள பட்டகோனியா என்ற பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் ஒன்பது பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 60 பேருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஹண்டா வைரஸின் இறப்பு விகிதம் 38 சதவிகிதம் எனவும் அதற்கு தற்போது வரை தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து குளோபல் டைம்ஸ் இணையதளத்திடம் பேசிய வூஹான் பல்கலைக்கழக உயிரியல் நிபுணர் யாங் ஷங்யூ,'' ஹண்டா வைரஸ் உள்ள ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலே மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவாது. மேலும் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸும், ஹண்டா வைரஸும் ஒருவரை தாக்க வாய்ப்பில்லை. கொரோனா வைரஸை போல, ஒருவரின் சுவாச மண்டலம் மூலமாக ஹண்டா வைரஸ் பரவாது. ஆனால் ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதரின் கழிவுகள் அல்லது ரத்தம் மூலமாக இது மற்றொருவருக்கு பரவும்” என்று தெரிவித்துள்ளார்.

எனவே இந்த வைரஸ் குறித்த யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை. சுத்தமாக இருப்பதே இதிலிருந்து தப்பிக்க சிறந்த வழி

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...