இந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடிக்கிறேன்: கபாலி பட நடிகை ஓபன் டாக்

Report Print Printha in பொழுதுபோக்கு
41Shares
41Shares
lankasrimarket.com

இந்தியில் முன்னணி நடிகையான நடிகை ராதிகா ஆப்தே தமிழ் சினிமாவில் கபாலி படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.

சமீபத்தில் இவரின் அரைகுறை ஆடையில் இருக்கும் படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால், கவர்ச்சி கதாபாத்திரங்களில் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், நாயகிகள் காதல் காட்சிகளுக்கும், கதாநாயகனுடன் டூயட் பாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

அதனால் தனக்கு அதில் நடிக்க உடன்பாடு இல்லை என்றும் கூறியிருக்கிறார். திரும்ப திரும்ப ஒரே மாதிரியான வேடங்களிலும் நடிக்க மாட்டேன்.

வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.

நான் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் அனைத்து படங்களிலுமே எனக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளது.

தினமும் படப்பிடிப்புகளில் புதிய விடயங்களை கற்கிறேன். எனக்கும் இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இப்போது மும்பையில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறோம். லண்டனிலும் வீடு இருக்கிறது. நமது கலாசார பண்பாடுகள் எனக்கு பிடிக்கும் என்பதால் மும்பை வீடை மிகவும் அழகாக அலங்காரம் செய்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்