ஒரு காதலரை கூட நான் கழற்றி விடவில்லை: கவலையில் பிரபல நடிகை

Report Print Printha in பொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஹிந்தி, தமிழ் திரைப்பட நடிகை, மாடல் அழகி போன்ற பன்முக திறமையை கொண்டவர்.

இவர் சமீபத்தில் நடிகர் ரித்திக் ரோஷனை காதலித்ததாக கூறியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருவரும் மோதிக் கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா,

என் வாழ்க்கை பற்றி உனக்கு எப்படி அனைத்தும் தெரியும் என்று என் காதலர் கேட்டார். அது பிளாக் மேஜிக். என் வாழ்வில் பல காதல்கள் வந்து போயுள்ளது.

காதல் தோல்வி ஏற்படும் ஒவ்வொரு முறையும் இத்துடன் காதல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைப்பேன்.

ஆனால் என்னை பொறுத்தவரை காதல் என்பது உடம்பு தொடர்பானது இல்லை.

ஒவ்வொரு முறையும் அவர்கள் தான் என்னை கழற்றி விடுகிறார்கள். யாரையும் கழற்றிவிடும் பாக்கியம் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.

16 வயது முதல் 31 வயது வரை நான் ஒருவரை கூட காதலித்து கழற்றி விடவில்லை.

என்னை கழற்றி விட்டவர்களின் பெயர்களை கூறினால் இவன் எல்லாம் உன்னை விட்டுட்டுப் போயிருக்கிறானா என்று ஆச்சரியப்படுவீர்கள்.

அதேசமயம் என்னை காதலித்து விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தபோது நான் அவர்களை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்