ட்விட்டரை விட்டு வெளியேறிய காயத்ரி ரகுராம்: காரணம் என்ன?

Report Print Kabilan in பொழுதுபோக்கு
50Shares
50Shares
lankasrimarket.com

நடிகை காயத்ரி ரகுராம், தனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்பதால் ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை காயத்ரி ரகுராம், அதன் பிறகு சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார்.

இந்நிலையில், அவர் பொலிசாரல் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அதற்கு மறுப்பு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நான் கடந்த 25 நாட்களாக அமெரிக்காவில் உள்ளேன் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது நான் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்ஆப்பில் பொய்யான தகவல் பரவியுள்ளது.

நான் பாஜகவைச் சேர்ந்தவள் என்பதால், என்னை குறி வைத்து தவறான செய்தியை பரப்ப வேண்டாம் என்று Photoshop meme creators அல்லது காங்கிரஸ் meme creators-களை கேட்டுக் கொள்கிறேன்.

உங்களின் தவறான செய்தி என் குடும்பத்தார், நண்பர்களை காயப்படுத்துகிறது. உங்களுக்கும் குடும்பம் உண்டு. காங்கிரஸ் meme creators என்னை குறி வைக்கிறார்கள்.

பெண்களின் பாதுகாப்புக்காக ஏதாவது செய்யுங்கள் please. தமிழக பொலிசை எப்படி Tag செய்வது. நான் அமெரிக்காவில் இருப்பதால் யாரை தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை.

என் வாழ்க்கை முழுவதும் மக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால், அரசியல் அதை செய்ய விடாது. நான் உண்மையை பேசி, மீடியா உட்பட அனைவரிடமும் உண்மையாக இருக்க விரும்பினேன்.

மக்கள் உண்மையை ஏற்க தயாராக இல்லை. நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன். தமிழகம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது என்று நம்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பாராக’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில் ‘ட்விட்டரை விட்டு வெளியேறுகிறேன். எனக்கு யாரும் ஆதரவு அளிக்காதபோது நானும் ஆதரவளிக்கப் போவது இல்லை. இது தான் என் கடைசி ட்வீட்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்