மகளை டேட்டிங் செய்பவருக்கு ஷாருக்கான் விதித்த முக்கிய விதிமுறைகள்!

Report Print Trinity in பொழுதுபோக்கு
282Shares
282Shares
ibctamil.com

பாலிவுட் பிரபலமான ஷாருக்கான் நடிப்பில் மட்டுமல்லாது குடும்ப பொறுப்பிலும் சமநிலை வகிப்பவர். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆர்யன், சுஹானா மற்றும் அப்ரம் ஆகிய மூவரில் இரண்டாவது பெண்ணிற்கு இப்போது 18 வயதாகிறது.

குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிடாமல் அவ்வப்போது சில விடயங்களில் கண்டிக்கவும் தெரிந்த கனிவான அப்பாவாக ஷாருக்கான் எப்போதுமே இருந்து வருகிறார்.

குழந்தைகளின் நல்வாழ்வில் கவனம் செலுத்தும் ஷாருக்கான் சமீபத்தில் தனது ஐந்து வயது மகன் அப்ரமிற்கு ட்ரீ ஹவுஸ் ஒன்றை பரிசளித்தார்.

தனது மகள் சுஹானாவிற்கு 18 வயது ஆகிய நிலையில் பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்றை அளித்த ஷாருக்கான் தன மகளை டேட்டிங் செய்பவருக்கான விதிகளாக சில முக்கிய விடயங்ககளை கூறியிருக்கிறார்.

சுஹானாவை டேட்டிங் செய்ய விரும்பும் இளைஞன் இதனை நிச்சயமாக கடைப்பித்தாக வேண்டும் என்றும் உறுதியாக கூறியிருக்கிறார்.

உனக்கு வேலை என்று ஒன்று இருக்க வேண்டும். வேலைக்கு செல்லுமுன் படிக்கும்போதே டேட்டிங் என்பதெல்லாம் அவசியமற்றது. சுஹானாவை டேட்டிங் செய்யுமுன் அதற்கான தகுதியாக உனது கனவு மற்றும் இலட்சியத்தை நீ அடைந்திருக்க வேண்டும். அதன்பின்தான் டேட்டிங் எல்லாம்.

எக்காரணத்தை கொண்டும் சுஹானாவை நீ காதலித்தாகவேண்டும் என்று வற்புறுத்த கூடாது. அவ்வாறு அவள் நோ சொல்லும் பொது அதனை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் உனக்கு இருக்க வேண்டும்.

டேட்டிங் என்பது இருவரது விருப்பத்துடனும் நடக்க வேண்டும்.

சுஹானாவிற்கு எதிராகவோ அல்லது உங்கள் அன்பை சிறுமைப்படுத்தும் விதமாகவோ ஏதேனும் நீ செய்தால் சுஹானாவின் தந்தையாக நன் என்றும் அதனை தட்டி கேட்பேன். அதற்கான உரிமை எனக்கிருக்கிறது.

பணத்திற்கோ புகழிற்கோ மயங்காதவராக இருக்க வேண்டும். சுஹானாவின் அன்பை மட்டுமே விரும்புவராக இருக்க வேண்டும்.

சுகானா என் இளவரசி. அவளை டேட்டிங் செய்வதால் அவளை நீ வென்றதாக அர்த்தம் கொள்ள கூடாது. சுகானா எப்போதும் என் இளவரசி. ஒரு இளவரசியை எப்படி நடத்த வேண்டும் என்று உனக்கு தெரியும் என்று நம்புகிறேன்.

என் இளவரசிக்காக நான் சிறை செல்லவும் தயங்க மாட்டேன். என் குழந்தைகளுக்கு எல்லாமே சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதில் சிறு பிழை ஏற்பட்டாலும் என்னால் தாங்கி கொள்ள முடியாது.

சுஹானாவிற்கு நீ எதை தருகிறாயோ அதுவே உனக்கு திரும்ப கிடைக்கும். அவளுக்கு அன்பு சந்தோஷம் மற்றும் மரியாதையை தந்தால் அதுவே உனக்கு திரும்ப கிடைக்கும்.

மாறாக அவளுக்கு வருத்தத்தை தந்தால் நீயும் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறான விதிகளை தனது மகளுடன் டேட்டிங் செய்ய போகும் நபருக்கு வழங்கியிருக்கிறார் ஷாருக்கான். இதன் மூலம் இவரது மகள் மீதான பிரியமும் பொறுப்பும் ஒன்றாக வெளிப்படுகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்