என் சொந்த வாழ்க்கை தான் முக்கியம்: 2 முறை விவாகரத்து பெற்ற பிரபல தமிழ் நடிகை தடாலடி

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

கணவர் மற்றும் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்ந்து வந்தது சரியானது இல்லை என்பதை தற்போது உணர்கிறேன் என நடிகை சாந்தி கிருஷ்ணா கூறியுள்ளார்.

பன்னீர் புஷ்பங்கள், சிம்லா ஸ்பெஷல், மணல்கயிறு, நம்பினால் நம்புங்கள் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா.

இவர் இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.

சாந்தி கிருஷ்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில், இளவயதில் ஒவ்வொருவருக்கும் பல கனவு இருக்கும். ஆனால் நிஜத்தில் அதெல்லாம் நடப்பதில்லை. என் வாழ்வில் எல்லா முடிவுகளையும் நானே எடுத்தேன்.

என் திருமண வாழ்க்கை என்னை மன அழுத்தத்தில் ஆழ்த்தியது.

தாய் ஆகிவிட்டால் நமது வாழ்க்கையை மறந்து கணவர், குழந்தைகளுக்காக வாழ்கிறோம். எனக்கும் என் கணவரும், குழந்தைகளும்தான் வாழ்க்கையாக இருந்தனர். ஆனால் அது சரியானதல்ல என்று இப்போது உணர்கிறேன்.

என் சொந்த வாழ்க்கையும் எனக்கு முக்கியம். பொருளாதார ரீதியாக சுதந்திரமான நிலையில் பெண்கள் இருக்க வேண்டியது அவசியம் என்பதை பல ஆண்டுகளுக்கு பின்பே புரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்