முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டுகிறார்.. தற்கொலை செய்யும் மனநிலை! தமிழ்ப்பட நடிகையின் கண்ணீர் வீடியோ

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
339Shares

காதலன் தன் மீது ஆசிட் வீசி ஊற்றி எரிக்க போவதாக மிரட்டுவதாகவும், தற்கொலை செய்யும் மனநிலையில் தான் இருப்பதாகவும் பிரபல நடிகை அஞ்சலி அமீர் அழுது கொண்டே பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழில் வெளியான பேரன்பு திரைப்படத்தில் நடித்தவர் அஞ்சலி. திருநங்கையான இவர் மலையாள படங்களிலும் நடித்துள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கடந்தாண்டு பங்கேற்றார்.

இந்நிலையில் அஞ்சலி அமீர் அண்மையில் தனது பேஸ்புக் லைவில் கண்ணீருடன் பேசியுள்ளார்.

அதில் அவர் ஒருவருடன் லிவ் இன் டு கெதருடன் இருந்ததாகவும் அவர் தன்னை ஆசிட் ஊற்றி எரித்து கொல்லப்போவதாக மிரட்டுவதாகவும் அழுது கொண்டே கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும், அந்த காதலன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தன்னுடைய சேமிப்பில் இருந்து சுமார் இரண்டு ஆண்டுகளில் சுமார் 4லட்சம் வரை அவர் பறித்துகொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக தற்கொலை செய்யும் மனநிலையில் உள்ளதாக கூறியுள்ள அஞ்சலி இந்த பிரச்னையை தீர்க்க பொலிஸ் அதிகாரிகளை அணுக திட்டமிட்டுள்ளார்.

ஆனால் தனது காதலன் பெயரை அஞ்சலி வெளியிடாத நிலையில் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்