அவருடனான பழக்கத்துக்கு பின்னரே போதை மருந்தை பயன்படுத்தினேன்! தமிழ் படங்களில் நடித்த நடிகையின் பகீர் வாக்குமூலம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதி பொலிசாரிடம் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமிழில் வெளியான அரியான், நிமிர்ந்து நில் போன்ற திரைப்படத்தில் நடித்தவர் ராகிணி திவேதி.

இவர் கன்னடத்தில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இது தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரத்தில் ராகிணி திவேதி தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையும் இன்று பெங்களூருவில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? அல்லது மீண்டும் அவரை பொலிசார் காவலில் எடுத்து விசாரிப்பார்களா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக ராகிணி திவேதியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது தனது நண்பரும், அரசு அதிகாரியுமான ரவி சங்கருடன் நடிகை ராகிணி திவேதிக்கு கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது நடிகை ராகிணி திவேதி போதைப்பொருட்களை பயன்படுத்தி உள்ளார்.

பொலிசார் நடத்திய விசாரணையின் போது ரவி சங்கருடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது போதைப்பொருட்கள் பயன்படுத்தியதை நடிகை ராகிணி திவேதி ஒப்புக் கொண்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் போதைப்பொருள் பழக்கம் எனக்கு கிடையாது என்றும், ரவிசங்கருடன் பழக்கம் ஏற்பட்ட பின்பு கிளப், பப், ரெசார்ட் ஓட்டல்களில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகளின் போது, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போதும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகை ராகிணி திவேதி பொலிசாரிடம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ. உள்ளிட்ட சில போதைப்பொருட்களை அவர் பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ரவி சங்கர், ராகுல் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள் இருக்கும், அதனை பயன்படுத்தி வந்தேன் என்றும், அதன்பிறகு, வீட்டில் அந்த போதைப்பொருளை வாங்கி வைத்து பயன்படுத்தியதாகவும் நடிகை ராகிணி திவேதி பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்