நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து அவரது மூத்த அண்ணன் கூறிய முக்கிய தகவல்

Report Print Basu in பொழுதுபோக்கு
1332Shares

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அவரது மூத்த அண்ணன் சத்தியநாராயணா முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கசிந்த கடிதம் குறித்து விளக்கமளித்த நடிகர் ரஜினிகாந்த் (69), அது தன்னுடைய அறிக்கை அல்ல என தெளிவுப்படுத்தினார்.

எனினும், அதில் தனது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்பட்டிருந்த தகவல் உண்மையே என ஒப்புக்கொண்டார். இது ரஜினி ரசிகர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ரஜினியில் உடல்நிலை இப்போது சரியாக இல்லை, எனவே மருத்துவர்கள் அறிவுத்தியுள்ள படி அவர் ஓய்வில் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ரொம்ப கஷ்டமாகிவிடும்.

இந்த மாதம் முடிந்த பிறகு மருத்துவர்கள் அவரை சோதனை செய்து உடல்நிலை எப்படி இருக்கு என்பது குறித்து தெரிவிப்பார்கள். முதலில் இந்த கொரோனா முடிவுக்கு வர வேண்டும் என ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா கூறியுள்ளார்.

மேலும், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு நல்ல செய்தி வரும் என சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்