தனது சொந்த செலவில் பணியாளர்களுக்கு பிரம்மாண்ட புத்தாண்டு விருந்து வைத்த ஸ்னாப்சாட் நிறுவனர்

Report Print Kabilan in தொழிலதிபர்
119Shares
119Shares
ibctamil.com

பிரபல இணைய வழி புகைப்பட பகிர்வு சேவையான ‘Snapchat'-யின் நிறுவனர் இவான் ஸ்பீகெல், உலகம் முழுவதும் உள்ள தனது பணியாட்களுக்கு, ரூ.26 கோடி செலவில் புத்தாண்டு விருந்து வைத்துள்ளார்.

இணையதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கு பயன்படும் வலைதளம் ‘Snapchat'. தற்போது ‘Instagram’, இதற்கு போட்டியாக வந்துவிட்டதால் ’Snapchat'-யின் செயற்பாடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

எனினும், இது குறித்து கவலைகொள்ளாத இதன் நிறுவனர் ஸ்பீகெல், ரூ.26 கோடி தனது சொந்த செலவில், பிரம்மாண்ட புத்தாண்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.

இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் மைக்ரோசாப்ட் சதுக்கத்தில் உள்ள மைக்ரோசாப்ட் அரங்கை அவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

மேலும், மைக்ரோசாப்ட் சதுக்கத்தினை நோக்கி அமைந்துள்ள ஆறேழு கட்டடங்களையும் சேர்த்து வாடகைக்கு எடுத்த அவர், அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர் ட்ரேக்கினை இசை நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்விற்காக, 'Snapchat'-யின் சுமார் 5000 பணியாளர்கள், உலகெங்கிலும் இருந்து விமானம் மூலமாக அழைத்து வரப்பட்டனர்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்