உங்களை கால் பாதங்களை அழகாகவும், ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதை படிங்க!

Report Print Nalini in நவீன அழகு
1635Shares

முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள நினைக்கும் பெண்கள் பாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வசீகர முகம் கொண்ட பெண்கள் கூட பாதத்தை முறையாக பராமாிப்பதில்லை.

பாதங்கள் அழகாய் இருந்தால் பெண்களின் அழகு இன்னும் கூடுதல். பாதங்கள்தானே யார் பார்க்கிறார்கள் என்று முகம், கை மட்டும் அழகுப்படுத்திக் கொள்பவர்கள் நிறைய உண்டு.

ஆனால் பாதங்களில் சுருக்கம் விழுந்து வெடிப்புகளோடு வறண்டு இருந்தால் நம் மீதிருந்த மதிப்பே சுவடு தெரியாமல் போய் விடும். எதிலேயும் மேலோட்டமாக இருக்காதீர்கள். பாதங்களையும் கவனியுங்கள். அழகு மட்டுமில்லாமல் பாதத்தின் மூலம் வரும் தொற்றுக்களையும் தடுக்கலாம்.

சிலருக்கு கால்களில் வெடிப்பு பிரச்சனை அதிகமாக ஏற்படுகிறது. கால்களில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க பெடிக்யூர் உபயோகப்படுத்துவது நல்லது. பெடிக்யூர் என்பது கால் விரல்களையும், பாதங்களையும் அழகுப்படுத்த மட்டுமல்லாமல் சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

அழகு நிலையங்களில் முக அழகோடு பாதங்களை அழகுப்படுத்துவதற்காகவே பெடிக்யூர் என்னும் ட்ரீட் மெண்ட் உண்டு. இதன் மூலம் பாதங்கள் கடினமாக இருந்தாலும் பாதத்தைச் சுத்தம் செய்து மசாஜ் மூலம் அழகாக்கி, பாதங்களில் உள்ள நரம்புகளைத் தூண்டும்படி செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக் செய்கிறார்கள்.

உடலில் இருக்கும் முக்கிய நரம்புகளின் இணைப்புகள் பாதங்களில் இருக்கின்றன. இந்த நரம்புகளை அவ்வ போது மசாஜ் போன்று தூண்டும்போது உடலும் மனதும் சேர்ந்து ரிலாக்ஸாகிறது.

தரையைச் சுத்தம் செய்யப் பயன்படும் சில சோப்பில் உள்ள இரசாயனம், கால்களில் பட்டால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். கடினமான செருப்பு அணிவதாலும் பாத வெடிப்புகள் வரும். சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை.

குளிர் மற்றும் வெயில் காலங்களில், பெரும்பாலான பெண்களுக்கு தவிர்க்க முடியாதது பாத வெடிப்பு. வெறும் கால்களில் நடக்கும் போது கொழுப்பு படிவங்கள் உடைந்து விடுவதால் அழுத்தம் தாங்காமல் தோல் பிய்ந்து கொண்டு வருவதைத்தான் வெடிப்பு.

உங்கள் பாதங்களை அழகாக்க இதோ கீழே உள்ளவற்றை படித்து பின்பற்றுங்கள்

எண்ணெய் :

தினமும் ஆலிவ், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன் பாதங்களில் தடவிவிட்டு செல்லுங்கள். இது பாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும். வறட்சியினால்தான் பாதங்களில் சுருக்கங்கள் ஏற்படும்.

ஷீயா பட்டர் :

ஷீயா பட்டரை பாதங்களில் தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். ஒரு வாரத்தில் உங்கள் பாதங்கள் பஞ்சு போன்று மென்மையாகவும், மெருகேறியும் இருக்கும்.

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ சரும சுருக்கங்களைப் போக்கும். விட்டமின் ஈ நிறைந்த ஆரஞ்சு எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால் சுருக்கங்கள் போய், கருமை மறைந்து தங்க நிறத்தில் மினுமினுக்கும்.

வெடிப்பு வராமல் தடுக்க

தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் நன்கு துடைத்து விட்டு பின் விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்

முதலில் கால்களின் பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடத்தில் சோப்பு போட்டுபல் துலக்க கூடிய பிரஷ்ஷால் நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.

பின் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுண்ணாம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அதனை ஒரு களிம்பாக குழைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்க போகும் போது அந்த களிம்பை பாத வெடிப்பில் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு 2 வாரங்கள் தொடர்ந்து தேய்த்து வந்தால் முற்றிலுமாக குணமடையும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்