இடுப்பு, வயிற்று பகுதிகள் பிட்டாக 2 எளிய வழி: காலையில் செய்யுங்கள்

Report Print Printha in உடற்பயிற்சி
806Shares
806Shares
ibctamil.com

தவறான உணவு பழக்கம், தாய்மை, ஹார்மோன் மாற்றம் போன்ற காரணங்களுடன் போதிய உடற்பயிற்சி இல்லாதது ஆகியவற்றினால் வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிக கொழுப்பும் சேர்ந்து உடல் எடை அதிகரித்து விடும்.

இதற்கு சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்து வந்தால் உடலை எப்போதும் ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

சைடு பெண்ட்ஸ் (Side Bends)

தரையில் கால்களை விரித்து வைத்துக் கொண்டு நேராக நின்று முதலில் வலது கையை வலது காலில் அல்லது இடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் இடது கையை மேல் நோக்கித் தூக்கியவாறு வலதுபுறமாகச் சாய்த்து பழைய நிலைக்கு வந்து, இதேபோல் அடுத்த பக்கமும் செய்ய வேண்டும்.

பலன்கள்
  • வயிற்றுப்புறத் தசைகள் வலிமையாகும்.
  • ஹெர்னியா போன்ற குடல் இறக்கப் பிரச்னைகள் வராது.

பெல்விக் ப்ரிட்ஜ் (Pelvic Bridge)

முதலில் தரையில் நேராக படுத்து கால்களை மடக்கி, சற்று அகட்டித் தரையில் பதித்து, கைகள் உடலின் பக்கவாட்டில், குப்புறவாக்கில் இருக்குமாறு வைத்து இடுப்பையும், மேல் உடலையும் உயர்த்தி, 10-15 விநாடிகள் நிலைநிறுத்த வேண்டும்.

அதன் பின் இந்த நிலையில் மூச்சை சீராக இழுத்து விட வேண்டும்.

பலன்கள்
  • இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் தசைப்பிடிப்பு நீங்கும்.
  • உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
  • நரம்பு மண்டலம் கட்டுப்படுத்தப்படும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்