பெண்கள் இப்படி கூட உடல் எடையை குறைக்க முடியும்! அது என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in உடற்பயிற்சி
4876Shares

உடல் உழைப்பு இல்லாமல் போவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருந்து வேலை பார்ப்பது, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் இன்றைய காலத்தில் பெரும்பாலன பெண்கள் உடல் பருமனுடன் இருக்க காரணமாக இருக்கின்றது.

இதற்காக கடின உடற்பயிற்சிகள், டயட்டுக்கள் போன்றவற்றை மேற்கொள்ளுவதுண்டு. இருப்பினும் சிலருக்கு தான் இது முழுப்பலனை தரும்.

இருப்பினும் ஜிம்மிற்கு செல்ல முடியாத பெண்கள் வீட்டில் இருந்து கூட சில பயிற்சிகள் செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும்.

அந்தவகையில் உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வதனால் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

தற்போது அந்த பயிற்சிகள் என்னெ்னன என்பதை பற்றி பார்ப்போம்.

  • பெண்கள் சமையல் வேலைகளில் ஈடுபடுவது கலோரிகளை எரிக்க உதவும். அரை மணி நேரம் சமையல் செய்தால் 92 கலோரிகளை எரித்துவிடலாம்.

  • அரை மணி நேரம் துணி துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். துணி துவைக்கும் வேலைகளை கைகளை கொண்டே செய்தால் எரிக்கப்படும் கலோரிகளின் அளவு அதிகரிக்கும். துவைத்த துணிகளை அயர்ன் செய்வதும் கலோரிகளை எரிக்க வழிவகை செய்யும்.

  • நாயுடன் அரை மணி நேரம் வெளியே சென்று நடைப்பயிற்சி செய்வதன் மூலம் 149 கலோரிகளை எரித்துவிட முடியும்.

  • மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தற்காத்துக்கொள்ள அரை மணி நேரம் தோட்ட வேலைகளை செய்வது 167 கலோரிகளை எரிக்க உதவும்.

  • அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்தாலும் 167 கலோரிகள் எரிக்கப்படும்.

  • வீட்டை ஒவ்வொரு முறை பெருக்கும்போதும் 240 கலோரிகள் வரை எரிக்கப்படும். அதனால் அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது நல்லது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்