தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

Report Print Thuyavan in உணவு
636Shares
636Shares
ibctamil.com

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை நாம் தூக்கி எறிவோம், ஆனால் அதில் பல நன்மைகள் அடங்கியுள்ளன.

விட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ள இந்த கறிவேப்பிலை, முடியின் வளர்ச்சிக்கு மட்டுமே நல்லது என அறிந்திருப்போம்.

இதல்லாமல் தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழும்.

  • காலையில் தினமும் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் இடை பகுதியில் இருக்கும் கொழுப்புகள் குறைந்து அழகான தோற்றத்தை பெறலாம்.
  • பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
  • சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராகும்.
  • கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து இருதய நோய் வராமல் பாதுகாக்கிறது.
  • வயிற்றில் செரிமான பிரச்சனை, கல்லீரலைப் பாதுகாப்பதோடு, தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்களை வெளியேறிவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்