இனி இந்த உணவுப் பொருட்களை மறந்தும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க! ஆபத்து வருமாம்

Report Print Jayapradha in உணவு

காலை உணவு உடலுக்கு ஆற்றல் தரும் என்பதால், அதனை ஒருபோதும் தவிர்க்க கூடாது.

அதுவும், காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் உணவுகளை உட்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில், தவறாக தெரிவு செய்யப்படும் காலை உணவுகள் உடல் உபாதைகளை ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே வெறும் வயிற்றில் சாப்பிடகூடாத சில உணவுகளை பற்றி பார்ப்போம்.

காபி

காபி காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

சோடா

சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால் இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால் அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து குமட்டலை ஏற்படுத்தும்.

தக்காளி

தக்காளி உள்ள ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். எனவே ஒருபோதும் தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.

மாத்திரைகள்

மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்தால் அவை வயிற்றில் அமிலத்துடன் கலந்து உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். எனவே எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது.

ஆல்கஹால்

ஆல்கஹாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள சேர்மங்கள் வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்.

காரமான உணவுகள்

காரமான உணவு உட்கொண்டால் வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும். எனவே காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது.

டீ

தினமும் டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால் இதனைக் வெறும் வயிற்றில் குடித்தால் அது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.

தயிர்

தயிரில் வெறும் வயிற்றில் உண்டால் அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் உடலில் மக்னீசியம் அதிகரித்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வரும். எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின் அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers