உடல் எடையை குறைக்கும் நெல்லிக்காய் டீ! இப்படி குடிச்சு பாருங்க

Report Print Kavitha in உணவு

உடல் எடையினால் அவதிப்படுபவர்களுக்கு பயனுள்ள நெல்லிக்காய் டீ-யை எப்படி செய்வது என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன்
  • இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் - கால் டீஸ்பூன்
  • தண்ணீர் - 2 கப்
  • எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்
  • நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்