கிளப் பார்ட்டியில் கொண்டாட்டம்... மெஸ்ஸி மீது தாக்குதல்: வெளியான வீடியோ

Report Print Basu in கால்பந்து

மத்திய தரைக்கடல் கடல் தீவான இபிசாவில், பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி, அணி வீரர்களுடன் இரவு விருந்து சென்றிருந்தபோது கிளப்பில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

மெஸ்ஸி தனது விடுமுறையின் கடைசி நாட்களை மெட் தீவில் அனுபவித்து வந்தார்.அவரும் அவரது மனைவி அன்டோனெலா ரோக்குஸோவும் லூயிஸ் சுரேஸ், ஜோர்டி ஆல்பா மற்றும் அவர்களது கூட்டாளர்களுடன் இணைந்து விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

இபிசாவில் ஓய்வு நாட்களை கொண்டடி வரும் மெஸ்ஸிக்கு கிளப்பில் நடந்த சம்பவத்தால் மனநிலை மோசமாக மாறியது, அங்கு மெஸ்ஸிக்கும் இன்னொருவருக்கும் இடையே ஒரு சண்டை ஏற்பட்டுள்ளது.

கிளப்பில், மெஸ்ஸி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, நபர் மெஸ்ஸியைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே கிளப்பில் பயங்கர தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

உடனே மெஸ்ஸியை சுற்றி வளைத்த பாதுகாப்பு ஊழியர்கள், அவருக்கு உதவி செய்து பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.வீடியோ காட்சிகள் மெஸ்ஸியை வெள்ளை நிற ஆடை அணிந்த ஊழியர்களால் பாதுகாக்கப்படுவதைக் காட்டியது.

பார்சிலோனா வீரர்கள் ஜூலை 1 ஆம் தேதி பயிற்சிக்குத் திரும்பினர், ஆகஸ்ட் 4 ஆம் தேதி ரைசர் கோப்பையில் அர்செனலை அணியை எதிர்கொள்கின்றனர்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்