மகனை தீவிரவாதத்திற்கு தூண்டிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
121Shares
121Shares
Promotion

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாயார் ஒருவர் தனது மகனை ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துவிட்ட குற்றத்திற்காக அந்நாட்டு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

கிறிஸ்டின் ரிவிரி(51) என்ற தாயார் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் மூளை சலைவை செய்யப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு தனது மகனை சிரியா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

மேலும், மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக சில பெண்களையும் ஐ.எஸ் இயக்கத்தில் சேருமாறு அனுப்பி வைத்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல், மகனை பிரிந்து வாழ முடியாத தாயார் கடந்த 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சிரியா சென்று மகனை சந்தித்து வந்துள்ளார்.

தாயாரின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை தொடர்ந்து கண்காணித்து 2014-ம் ஆண்டில் கைது செய்துள்ளனர்.

தாயாரின் வாக்குமூலத்தை தொடர்ந்து அவரது மகனை 2015-ம் ஆண்டு கைது செய்து பிரான்ஸ் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

மகனிடம் விசாரணை நடத்தியபோது, பாரீஸ் தாக்குதலில் ஈடுப்பட்ட தீவிரவாதியின் கூட்டாளி எனவும் தெரியவந்துள்ளது.

மகன் மீதான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று தாயாருக்கு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

மகனை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து பல்வேறு குற்றங்களை செய்த காரணத்திற்காக தாயாருக்கு நீதிபதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்