ஹிட்லரால் கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் பிரான்சில் உள்ளதா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
116Shares
116Shares
ibctamil.com

நாஜி மருத்துவரால் கொடூரமாக கொல்லப்பட்ட யூதர்களின் எலும்புகள் பிரான்ஸ் மருத்துவமனையில் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாசி மருத்துவரான August Hirtஆல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட 86 யூதர்களின் எலும்புகள் இன்னும் Strasbourg பல்கலைக்கழகத்தின் Anatomy பிரிவில் வைக்கப்பட்டிருக்கலாம் என Dr Michel Cymes தெரிவித்துள்ளார்.

இவர் பிரான்சு நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆவணப்படம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாது Strasbourg பல்கலைக்கழகமும் பல நிபுணர்களை வைத்து, August Hirtஇன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 20 பெட்டிகளில் என்ன உள்ளது என்று ஆராய்ச்சி செய்யத் தொடங்கி உள்ளது.

யூதர்கள் மீது மருத்துவப் பரிசோதனைகளை நிகழ்த்துவதில் புகழ் பெற்ற Dr. August Hirt யூத இனம் அழிந்துபோய் விடும் என்று நம்பியதால், அவர்களது மண்டை ஓடுகளை ஆராய விரும்பினான்.

ஹிட்லரின் காலத்தில் அவரது கைக்கூலிகளான நாசி மருத்துவர்களால் பரம்பரை வியாதிகள் இருப்பதாகக் கூறி 70,000 முதல் 200000 யூதர்கள் வரை அநியாயமாகக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தனது ஆவணப்படமும் August Hirtஐக் குறித்த விசாரணைகளும் ஒரு முடிவல்ல, தான் இனி நிகழ்த்தப்போகும் விசாரணைகளுக்கு ஆரம்பம் என்கிறார் Dr Michel Cymes.

எப்படியோ அவரது ஆவணப்படம் ஹிட்லரின் மருத்துவர்கள் நிகழ்த்திய மேலும் பல அராஜகங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது என்பது மட்டும் உண்மை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்