பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
337Shares
337Shares
lankasrimarket.com

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் மீதான மக்களின் ஆதரவு கடும் சரிவை சந்தித்து வருவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இதே காலகட்டத்தில் முந்தைய பிரான்ஸ் ஜனாதிபதிகளுக்கு இருந்த ஆதரவைவிடவும் மேக்ரான் மிகவும் குறைவான மக்கள் ஆதரவையையே பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக அமைச்சர்களின் ராஜினாமா, மெய்க்காப்பளர் தொடர்பிலான ஊழல் குற்றச்சாட்டு, தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை என பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பிரான்ஸ் மக்கள் தொகையில் சுமார் 31 சதவிகித மக்கள் மட்டுமே மேக்ரான் அரசை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

இது பிரான்ஸ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த ஜனாதிபதிகள் பெற்ற ஆதரவைவிடவும் மிகவும் குறைவு எனவும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மேக்ரான் ஆட்சிபொறுப்பேற்று 16 மாதங்கள் முடிவடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி François Hollande 32 விழுக்காடு ஆதரவை பெற்றிருந்துள்ளார்.

ஆனால் ஆட்சி பொறுப்பேற்று முதல் 16 மாத காலத்தில் முன்னாள் ஜனாதிபதி Nicolas Sarkozy சுமார் 41 விழுக்காடு மக்கள் ஆதரவை பெற்றிருந்தார்.

பிரான்ஸ் ஜனாதிபதிகளில் மிகவும் பிரபலமற்றவர் என கருதப்பட்ட François Hollande அமைச்சரவையில் தொடர்ந்து 2 ஆண்டு காலம் பொருளாதார ஆலோசகராக பணியாற்றிவர் மேக்ரான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்