பாரிஸில் குப்பை அகற்றும் வாகனத்தில் சிக்கி முதியவர் பலி!

Report Print Kabilan in பிரான்ஸ்
154Shares
154Shares
ibctamil.com

பிரான்சின் பாரிஸ் நகரில் முதியவர் ஒருவர், குப்பை அகற்றும் வாகனத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

பாரிஸின் Arthur Rimbaud பகுதியில், நேற்றைய தினம் குப்பை அகற்றும் வாகனத்தை அதன் ஓட்டுநர் பின்னால் எடுத்துள்ளார். அப்போது அலறல் சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

பின்னர், கீழே இறங்கி சென்று பார்த்தபோது 72 வயதுடைய முதியவர் ஒருவர் வாகனத்தில் சிக்கியிருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு படையினர், உயிருக்கு போராடிக்கொண்ருந்த முதியவரை மீட்ட சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார். பின்னர், பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக மரணமடைந்த நபரின் உடல் மதுபோதை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்