காலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த நபரால் பரபரப்பு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் நபர் ஒருவர் காலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்சின் Villeneuve-Saint-Georges நகரில் உள்ள மருத்துவமனைக்கு, 30 வயதுடைய நபர் ஒருவர் காலில் குண்டு பாய்ந்ததால் ரத்தம் வழிந்த நிலையில் வந்துள்ளார்.

அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், இதுதொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விரைந்த வந்த பொலிசார் குறித்த நபரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அமைதி காத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த நபருக்கு பொலிசாரின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எனினும், குறித்த நபர் செந்தனியை சேர்ந்தவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் அறியப்படவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்