துப்பாக்கிச் சூட்டில் பலியான பெண் பொலிஸ் அதிகாரி! விசாரணையின் கீழ் சக அதிகாரி

Report Print Kabilan in பிரான்ஸ்

பாரிசில் காவல்துறையினரின் தலைமை அலுவலகத்தில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் பலியாகியுள்ளார்.

நேற்றைய தினம் பாரிசின் 17ஆம் வட்டாரத்தில் காவல்துறையினரின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் அதிகாரி ஒருவரின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்தது.

அப்போது, துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு சக பெண் அதிகாரியின் தலையில் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அப்பெண் அதிகாரி பலியானார்.

இச்சம்பவம் விபத்தாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சங்கம் அறிவித்துள்ள நிலையில், பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் IGPN இடம் இந்த விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரி ஒருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers